காரைக்குடி: திருமண நிகழ்ச்சியில் பாடல் போட்டு ஆடியவர் மீது தாக்குதல்

காரைக்குடி அருகே கண்டனூரில் நடந்த திருமண விழாவில், பாடல்களுக்கு ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் மோகன் என்ற இளைஞரை பூபாலன் என்பவர் விறகு கட்டையால் தாக்கி காயப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் உதவி சார்பு ஆய்வாளர் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி