காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு கல்லூரி மைதானத்தில், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாரா கிளைடிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் முதல்முறையாக பாரா கிளைடிங் செய்து, வானில் பறக்கும் வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.