இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, படமாத்தூர் அருகே கரும்பாவூர் விளக்கு பகுதியில் சென்றபோது, அதில் பயணித்த படமாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமித் என்ற இளைஞர், திடீரென உடல் நலக்குறைவால் பேருந்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல தனியார் பேருந்துகளில் இவை பின்பற்றப்படாமை கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, தனியார் பேருந்துகளிலும் பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.