சிவகங்கை: ஆற்றில்மீன் பிடிக்க சென்றவர் பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பழைய சருகனி ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (44) மனைவி மற்றும் இரு மகளுடன் வசித்து வந்தார். நேற்று 16ம் தேதி மாலையில் விருசூழி ஆற்றின் உதையாச்சி அணைக்கட்டில் மீன் பிடிக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தார். 

அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டார் என தெரிவித்தனர். வேலாயுதபட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து அரசு மருத்துவமனையில் உடலை பிரேத பரிசோதனைக்கு வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி