காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து பாஜகவினர் சாலையில் அமர்ந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்வோம் என்று கூறியவுடன் வியாபாரிகள் ஒரு சிலரும் சமூக ஆர்வலர்கள் ஒரு சிலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக காவல்துறையினர் கைது செய்வோம் என்று கூறியவுடன் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். அதன் பின்பு பாஜகவினர் 30 பேர் சமூக ஆர்வலர்கள் 5 பேர் வியாபாரிகள் 10 பேர் நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மாறன் தலைமையிலான கட்சியினர் 5 பேர் ஆக மொத்தம் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்