சட்ட விரோத மது விற்பனை; 5 நபர்கள் கைது

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று (அக்.,2) போலீசார் சோதனை செய்ததில் 100 மதுபாட்டில், 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ரவி, பாலகிருஷ்ணன், சந்திரன், பழனி குமார், ப்ரைட் அஸ்லாம் ஆகிய 5 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி