காரைக்குடியில் 467 கிலோ குட்கா பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சுப்பிரமணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அறந்தாங்கியைச் சேர்ந்த வீரசேகரன் என்பவர் காரில் 211 கிலோ 400 கிராம் புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அவர்களுக்கு வழங்க வந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

வீரசேகரனிடம் நடத்திய விசாரணையில், அவர் பெங்களூருவில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை வாங்கி வருவதாகத் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில், பெங்களூரைச் சேர்ந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர் ராஜீவ்ராம் ஆகியோர் ஒரு காரில் 256 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுடன் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப்பொய்கை என்ற இடத்திற்கு வந்தனர். அங்கு காத்திருந்த காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மொத்தமாக, ஒரே நாளில் 467 கிலோ 400 கிராம் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி