சிவன் ராத்திரியை முன்னிட்டு 25 கிடா உரித்து அசைவ விருந்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே பகுதியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சிவன் ராத்திரி முன்னிட்டு, அப்பகுதி மக்கள் 25 ஆடுகளை உரித்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் போன்றவற்றை உரலில் இடித்து ரசம் வைத்து, பக்தர்களுக்கு சுவையான அசைவ விருந்து வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று இந்த விருந்தை உண்டனர். முன்னதாக பாண்டி முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி