தாமரைப்பூ பறிக்கச் சென்ற சகோதரிகள் குளத்தில் மூழ்கி பலி

விழுப்புரம் அருகே தாமரைப்பூ பறிக்கச் சென்ற சகோதரிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டை சேர்ந்தவர் லாரி டிரைவர் அய்யப்பன். இவரது மகள்கள் ஹர்ஷினி (12), கயல் (8) ஆகியோர் நேற்று (மார்ச் 14) தாமரைக் குளத்தில் பூ பறிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அக்காவைக் காப்பாற்ற முயன்ற தங்கையும் நீரில் மூழ்கிய நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி