ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒரே நாளில் திருமணம் நடக்கவிருந்த அக்கா, தங்கை இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ம் தேதி திருமண வரவேற்பு முடிந்த நிலையில், பிப்.21 அதிகாலை ஷோபா (25) மற்றும் விமலா (23) ஆகிய இருவரும் தங்கள் அறையில் உயிரிழந்து கிடந்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ள போலீசார், இந்த துயரமான முடிவுக்கான பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.