வரும் 11ஆம் தேதி எஸ்ஐஆர் கணக்கெடுப்பு நிறைவடையும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (டிச. 9) நண்பகல் விவாதம் நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து விவாதிக்க சுமார் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார்.