SIR பணியில் இருந்தவர் திடீர் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி

ராணிப்பேட்டையில் SIR பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோளிங்கர் தேர்தல் துணை வட்டாட்சியரான பிள்ளையார்(42), என்பவர் SIR பணிகளை மேற்கொண்டிருந்தபோது அலுவலகத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இவர் கடந்த ஒரு வார காலமாக பணிச்சுமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி