வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து, ஆணையர்களின் உத்தரவுகளை அதிகாரிகள் தவறாமல் பின்பற்றுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில், இனி தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டங்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே முறைப்படி வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:News18