"அரசு நிலத்தில் சிப்காட் வளாகத்தை அமைக்க வேண்டும்".. அன்புமணி

"மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பது அநீதி" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பிய அவர், “செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை அரசுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். எந்தவொரு திட்டத்திற்காகவும் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே பாமகவின் நிலைப்பாடு என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕