தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, முதலமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், அவருக்கு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான TANSIM-ன் தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
நன்றி: பாலிமர்