சிங்கப்பூரில் அசாம் பாடகர் ஜூபீன் கார்க் (52) உயிரிழந்தது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஜூபீன் விபத்தில் உயிரிழக்கவில்லை, மாறாக கொலை செய்யப்பட்டார்” என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், விசாரணை அமைப்புகள் அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து வருவதாகவும் முதல்வர் கூறினார்.