பிரபல பின்னணி பாடகி பாலக் மூச்சால், உலகளவில் அங்கீகாரம் பெற்ற தனது சமூக பணிகளுக்காக, தற்போது கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம், இவர் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உயிர்காக்கும் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார். சிறு வயதில் அளித்த வாக்குறுதி மற்றும் ஆழ்ந்த மனிதநேயத்தின் அடிப்படையில் இந்த பணியை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:NewsTamil24/7