ஆசியாவின் முதன்மையான தங்கம் வர்த்தக மையமாக உருவெடுக்க போவதாக சிங்கப்பூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் புல்லியன் சந்தை சங்கம் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, அந்நாட்டின் நிதித்துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து உலக தங்க சந்தையில் சிங்கப்பூரை ஒரு வலிமையான சக்தியாக மாற்றும் என கூறப்படுகிறது.