சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

சிங்கப்பூரில் இன்று (மே 26) தொடங்கும் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் சீன வீரர் லு குயாங் சூவுடனும், ஆயுஷ் ஷெட்டி கனடாவின் விக்டர் லாயுடனும் மோதுகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொண்டு தனது சவாலைத் தொடங்குகிறார். மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி உட்பட பல இந்திய வீரர்கள் சுமார் ரூ.9.5 கோடி பரிசு தொகை கொண்ட இத்தொடரில் களம் காண்கின்றனர்.

தொடர்புடைய செய்தி