200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிம்ரன் சர்மாவுக்கு தங்கப்பதக்கம்

இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா, 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (Asian Para Games 2026) பெண்களுக்கான 200 மீட்டர் T12 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் தனது வழிகாட்டியான சிவம் என்பவருடன் இணைந்து ஓடி, 24.80 வினாடிகளில் இலக்கை எட்டிப் புதிய ஆசிய பாரா விளையாட்டு சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இதே போட்டியில் இந்தியாவின் தேஜல்பன் தாமோர் 25.23 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி

✕
✕