நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர் ரோபோ சங்கர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.