ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை

இந்தியச் சந்தையில் வெள்ளி விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று (டிச.3) ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.201-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி காலத்தில் ஒரு கிராம் ரூ.207 வரை உயர்ந்திருந்த வெள்ளி, அதன் பின் சரிந்த நிலையில், தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி