வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருச்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார நிலையின்மை காரணமாக நேற்று ஒரு கிராம் ரூ.300-க்கு விற்கப்பட்டது. இதனிடையே இன்று (பிப்., 24) ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.