தமிழ்நாட்டில் வெள்ளி விலை இன்று (மே 16) ஒரே நாளில் ரூ.15,000 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே 6ஆம் தேதி ஒரு கிலோ ரூ.2,75,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 12 நாட்களில் ரூ.30,000 வரை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.315,000-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.10,000 குறைந்தது. இன்று ரூ.15,000 குறைந்துள்ளது.
நன்றி: TV9 Tamil