இந்தியாவில் வெள்ளியின் விலை, பாதுகாப்பான முதலீட்டுத் தேவையால் ஏற்பட்ட வலுவான ஈர்ப்பு, புவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, 2026ஆம் ஆண்டு ஜனவரி 19அன்று ஒரு கிலோ ரூ.3,00,315 என்ற உச்சத்தை எட்டியது. தற்போது, 10 மாதங்களில் சுமார் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இந்த 10 மாத இடைவெளியில் அதிக விலைக்கு வெள்ளி வாங்கியவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அந்த அளவுக்கு இழப்பு ஏற்படவில்லை.