இளைஞர்களிடம் ட்ரெண்டாகும் ’Silent Walk’ பழக்கம்

ஜென் Z தலைமுறையினரிடையே மொபைல் போன், ஹெட்போன் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களும் இல்லாமல் அமைதியாக நடக்கும் ’Silent Walk’ பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. வெளி உலக சத்தங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கவனச்சிதறல்கள் இன்றி நடப்பது, மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை மேம்படுத்த உதவுகிறது. இந்த அமைதியான நடைப்பயிற்சி சுய சிந்தனையை தூண்டுவதோடு, ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கும் வழிவகுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி