இந்தியாவின் ஐந்தாவது எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் அறிவிப்பு

இந்தியாவின் ஐந்தாவது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் உருவெடுத்தது. 'ULLAS – நவ பாரத் சாக்‌ஷரதா கார்யக்ரம்' (ULLAS – Nav Bharat Saaksharta Karyakram) திட்டத்தின் கீழ், நேற்று (மே 27) சிக்கிம் மாநிலம் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அம்மாநிலம் 99.82 சதவீத எழுத்தறிவு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது; இது, முழுமையான எழுத்தறிவுக்கான அளவுகோலாகக் கல்வி அமைச்சகம் நிர்ணயித்துள்ள 95 சதவீதத்தை விட அதிகமாகும்.

தொடர்புடைய செய்தி