சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக, தாம்பரம் மார்க்கமாக செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் இன்று (ஜூலை 14) திடீரென நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் ஏதும் வராததால், கடற்கரை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், சிக்னல் கோளாறை சரிசெய்து ரயில் சேவையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி:News18