சென்னையில் சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் ஸ்தம்பிப்பு, பயணிகள் அவதி

சென்னையின் புறநகர் பகுதிகளில் முக்கிய போக்குவரத்து சாதனமான மின்சார ரயில்களில், கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாம்பரம் அருகே ஒரே டிராக்கில் இரண்டு ரயில்கள் நிற்கின்றன. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் போன்ற இடங்களில் ரயில்கள் நீண்ட நேரம் நிற்பதால், வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சிக்னல் கோளாறு சென்னையின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி