இந்திய திரையுலகில் முக்கிய நடிகரான சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஆண்டின் மார்ச் மாதம், இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று நடந்து முடிந்துள்ளது. தற்போது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மணமக்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.