இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் சுப்மன் கில் 11 ரன்கள் எடுத்தபோது, ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். தற்போது வரை 737 ரன்கள் அடித்துள்ளார்.