விஜய் சேதுபதி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்?

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி