திருவள்ளூரில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, தனது தந்தை ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸ்-க்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சுகர், பிரஷர் இருக்கிறது. இதனால் அதிக கோபம் கூடாது, அலைச்சல் கூடாது என அவரின் நலனுக்காகவே நான் பார்த்துப்பார்த்து கவனித்து வந்தேன். அதனாலேயே அவரை நிர்வாகிகளை அதிகம் சந்திக்க வேண்டாம் என கூறினேன்" என கூறினார்.