டாஸ்மாக் தனியார்மயமாக்கலா? அமைச்சர் விக்னேஷ் பேட்டி

டாஸ்மாக் கடைகளில் காணப்படும் அதிக கூட்டம் மற்றும் அதன் சூழலை சீரமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 21) பேட்டியளித்த அவர், ஆலோசனையின் ஒரு பகுதியாக, கடைகளை முறைப்படுத்த ரெஸ்ட்ரோ பார்கள் தொடங்குவது மற்றும் டாஸ்மாக்கை தனியார்மயமாக்குவது உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். இது தொடர்பான இறுதி முடிவுகள் பரிசீலனைக்கு பிறகு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி