தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பர். வெள்ளியும் பணவீக்க காலங்களில் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், மூலதனத்தை பெருக்கும் ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வெள்ளியை எளிதாக வாங்கி, விற்கவும் முடியும். வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் ஈடிஎப் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.