தென்காசி ஆலங்குளத்தில் கள் இறக்கும் தொழிலாளி மணிகண்டன் (32) மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனிடம் போலீசார் விசாரிக்கச் சென்றபோது, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் மணிகண்டன் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து பனை தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.