ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டு தட்டுப்பாடு: ரிசர்வ் வங்கிக்கு ஊழியர் சங்கம் கோரிக்கை

ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வங்கிகளிலும் இந்த நோட்டுகள் கிடைப்பதில்லை என்றும், அன்றாட தேவைகளுக்கும், ஏழை, கிராம, நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் இந்த நோட்டுகள் மிகவும் அவசியம் என்றும், எனவே ரிசர்வ் வங்கி தேவையான அளவு அச்சிட்டு புழக்கத்தில் விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி