ஜெர்மனியின் முனிச் நகரில், நேற்று (ஜூன் 11) பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில், 8 பேரில் ஒருவராக நுழைந்த இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் பதக்கத்தை தவறவிட்டார். அவர் 20 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பிடித்தார். சீனாவின் யுஜி சன் 38 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதேபோல் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்தியாவின் செயின் சிங் 407 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.