தனுஷ் தயாரித்து, ராஜ் குமார் பெரியசாமி இயக்கும் 'D55' படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் உளவாளியாகவும், மம்மூட்டி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கும் இந்தத் த்ரில்லர் படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.