மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கோபிராஜ், தனது 2 மகள்களான யுவஸ்ரீ (10) மற்றும் கனிஷ்கா (5) ஆகியோரை கயிறால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிராஜ் உடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த மனைவி காயத்ரி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கூடல்புதூர் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.