நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளார். கார் பந்தயம் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை மட்டுமே, படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “திரைப்படங்களில் நடித்ததால் சில கார் பந்தயங்களில் மட்டுமே என்னால் பங்கேற்க முடிந்தது. பந்தய கார் ஓட்டுநராக மட்டுமின்றி அணியின் உரிமையாளர் என்ற முறையில் இதில் கவனம் செலுத்துவது முக்கியமாக உள்ளது. இனி 6 மாதங்கள் நடிப்பு, 6 மாதங்கள் கார் ரேஸில் ஈடுபடுவேன்” என தெரிவித்துள்ளார்.