சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் 'ஸ்டர்னஸ்' என்ற புதிய ஆண்ட்ராய்டு தீம்பொருளைக் கண்டறிந்துள்ளனர். இது பயனர்களின் வங்கி விவரங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது வங்கி செயலிகளின் உள்நுழைவுத் திரைகளை நகலெடுத்து, பயனர்களின் சான்றுகளைத் திருடுவதாக கூறப்பட்டுள்ளது. லாகின் செய்யும் வேளையில் சைபர் குற்றவாளிகள் மொபைல், கணிணியை முழுமையாகக் கட்டுப்படுத்தி, பயனர் செயல்பாடுகளைக் கண்காணித்து, மோசடி பரிவர்த்தனைகளைச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.