வார இறுதி என்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் இன்று (நவ.09) கோழி இறைச்சி கிலோ ரூ.230 முதல் ரூ.250 வரையிலும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையிலும் விற்பனையாகிறது. மேலும், மீன்களில் முதல் தர வஞ்சிரம் கிலோ ரூ.2,500-க்கும், கொடுவா ரூ.800-க்கும் விற்பனையாகிறது. பால் சுறா, சீலா, சங்கரா மீன் கிலோ தலா ரூ.600, பாறை ரூ.800, நெத்திலி ரூ.400, நண்டு ரூ.600, பண்ணா ரூ.500 என விற்பனையாகிறது.