சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்

தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று (நவ., 13) நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில், பாகம்பிரியாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்தேரோட்டத்திற்கு முன்னதாக, அபிஷேகம் மண்டபத்தில் பாகம்பிரியாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி