பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க, தமிழக அரசு சிற்றுந்து என்ற திட்டத்தை, 1997ஆம் ஆண்டு கொண்டுவந்தது. இதை விரிவுபடுத்தும் வகையில், புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக்கிய அரசு அலுவலகங்களுக்கு சென்று பொதுமக்களை இறக்கிடவிட ஏதுவாக மேலும் 1 கி.மீ. தொலவை வரை சிற்றுந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள், இந்த திட்டத்தில் பயன்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.