மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் அந்நாட்டிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். அங்கு சென்றதும் தான் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற சூழல் உள்ள நிலையிலும், மரணம் வந்தால் அது தன் சொந்த மண்ணிலேயே நிகழ வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அவர் வங்கதேசம் திரும்பியவுடன் நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.