சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை

சின்ன வெங்காயம் மூன்று மாத கால பயிர் என்பதால் விவசாயிகள் வெயில், மழை என்று பாராமல் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த சின்ன வெங்காயத்தை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காமல் பட்டறையில் சேமித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயங்கள் 3 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சீசனில் கிலோ ரூ.13க்கு கொடுத்த வெங்காயம் தற்போது கிலோ ரூ.3க்கு வியாபார்களுக்கு கொடுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி