பாகிஸ்தானின் சார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கி 5 பேருடன் புறப்பட்ட கே2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737-400 சரக்கு விமானம், அரபிக்கடலில் 35,000 அடி உயரத்தில் பறந்தபோது ரேடார் தொடர்பை இழந்து மாயமானது. 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மிக வேகமாக கீழே இறங்கி மறைந்ததால் அது கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பாகிஸ்தான் கடற்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் பயணித்த 5 பேரின் நிலை என்ன என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.