மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தாம்பரம் அரசு காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், "பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காத அவல நிலையில் தமிழக அரசு செயல்படுவது வெட்கக்கேடானது" எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.