திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 4 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியர் ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕